August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி, ஜூலை 1

தேனி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், பெரியகுளம், வீரபாண்டி, கூடலூர், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலையில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பத்தின் தாக்கமும் அடியோடு குறைந்தது. தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் 265 கன அடி மட்டுமே வந்த நிலையில் நேற்று காலை 700 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 52.82 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் 447 கன அடி நீர் வந்த நிலையில் நேற்று நீர்வரத்து 608 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் திறப்பு 869 கனஅடி.

Spread the love