August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் உயர்வு

தேனி, ஜூலை 9

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைபெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 128.25 அடியாக இருந்தது. வரத்து 1526 கனஅடி, நீர்திறப்பு 1633 கனஅடி. வைகை அணையின் நீர்மட்டம் 54.66 அடி, வரத்து 1600 கனஅடி, திறப்பு 969 கனஅடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.23 அடி, பெரியாறு 12, தேக்கடி 7.2, கூடலூர் 3.7, உத்தமபாளையம் 1, வீரபாண்டி 12 அடியாக உள்ளது.

Spread the love