October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பெரு நெல்லிக்காய்

பெரு நெல்லி காயகல்ப மூலிகைகளில் ஒன்றாகும். எந்தக் கணியிலும் இல்லாத அளவிற்கு வைட்டமின் சி உள்ளது. அதிக அளவில் நோய்களை கட்டுப்படுத்தும் குணம் உடையது. தோல் வியாதிகளை குணப்படுத்தும், மூலிகை மருந்துகளில் முக்கியத்துவம் வாய்ந்தது பெருநெல்லி. ரத்த சுத்திகரிப்பு, பருக்கள், கொப்பளங்கள் வராமல் தடுக்கும். சளியை வெளியேற்றி சுவாச மண்டலத்தை சீராக்கும். இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. மன இறுக்கத்தை போக்கி நுண்ணறிவுடன் செயல்பட வைக்கிறது. பக்கவாதம் நரம்புத் தளர்ச்சி நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. மூளை பலம் பெறவும், ஐம்புலன்களை சீராக இயக்கவும் சரி செய்கிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. கண் பார்வைத் திறனை அதிகரித்தல், கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்றவற்றை சரி செய்கிறது. காய்ச்சலை தடுக்கிறது. காயங்கள், வீக்கங்கள் போன்றவற்றால் ஏற்படும் வலிகளைப் போக்கி உதவுகிறது. நெல்லி ஊறுகாய் சாரு, தேன் நெல்லி வற்றல் போன்ற வடிவங்களில் கிடைக்கிறது.

ASN சாமி ஆதனூர். 94423 11505

Spread the love