மும்பை, மே 19
தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் டெவலப்பரான கிராஃப்டோன் பப்ஜி மொபைல் கேமை போலவே தோற்றம் அளிக்கும் பேட்டில் கிரவுண்ட் இந்தியா கேம் என்ற கேமை வடிவமைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது இந்தியாவின் பப்ஜி மொபைல் கேம் வெர்ன் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த மொபைல் கேமுக்கான முன்பதிவு தற்போது ஆரம்பமாகி உள்ளது. முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் இந்த கேமை பயன்படுத்தும் வகையில் அதற்கான முன்பதிவை KRAFTON நிறுவனம் பிளே ஸ்டோரில் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு கருதி சீன நாட்டின் 117 மொபைல் போன் அப்ளிகேன்களை பயன்படுத்த கடந்த செப்டம்பரில் தடை விதித்தது அரசு. அதில் மல்டி பி¼ளயர் மொபைல் கேம் அப்ளிகேசனான பப்ஜி விளையாட்டும் முடக்கப்பட்டது.
பிளே ஸ்டோரில் பேட்டில் கிரவுண்ட் இந்தியா கேம் என்ற அப்ளிகேசனை Pre-register பட்டனை செலக்ட் செய்வதன் மூலம் இந்த அப்ளிகேன் இந்தியாவில் வெளியாகும் போது நோட்டிபிகேசன் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த அப்ளிகேசன் இந்தியாவில் எப்போது வெளியாகிறது என்ற அறிவிப்பை எதையும் அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை. அதே போல ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கான முன்பதிவு ஆரம்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.