October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பேரிடர் மேலாண்மையில் தொலையுணர்வு தொழில்நுட்ப பயிற்சியை ஆட்சியர் துவக்கி வைத்தார்

கடலூர், அக்.12

கடலூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பேரிடர் மேலாண்மையில் தொலையுணர்வு தொழில்நுட்பம் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: பேரிடர் ஏற்படும் சமயங்களில் அதனை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்த அனைத்து துறை அலுவர்களுக்கான பயிற்சி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் நடத்தப்படுகிறது.

இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பேரிடரை கண்காணித்து அதனால் ஏற்படும் பாதிப்புகளை அளவிட்டு சரியான நேரத்தில் துல்லியமான தரவுகளை பெற முடியுமானால் அவைகள் பேரிடர் மேலாண்மைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதைகருத்தில் கொண்டு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலையுணர்வு மற்றும் புவிசார் தகவல் துறைநவீன தொழில்நுட்பங்களான செயற்கைக் கோள் தொலையுணர்வு தரவுகள் டிரோன் தொழில் நுட்பம் மற்றும் ஜி.ஐ.எஸ் என்றழைக்கப்படும் புவிசார் தகவல் அமைப்புஆகியவற்றைகொண்டு இயற்கை சீற்றங்களை சமீப காலமாக கண்காணித்து வருகிறது.

இந்ததொழில்நுட்பங்களைபயன்படுத்திபயிர் பரப்பளவுகணக்கிடுதல்பயிரின் வளர்ச்சிநிலையைஅறிதல்பயிர் மகசூல் கணக்கிடுதல்வறட்சியால் ஏற்படும் பாதிப்புகளைகண்டறிதல்வெள்ளம் சூழ்ந்தபகுதிகளில் கணக்கிடுதல் மற்றும் புயலால் பயிர்களுக்குஏற்படும் பாதிப்புகளைகணக்கிடுதல் போன்றமுக்கியபணிகளைசரியானநேரத்தில் துல்லியமானதரவுகளுடன் கொடுக்கமுடியும்.

இதை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் கடலூர் மாவட்டத்தில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து பகுப்பாய்ந்து அதை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் மேலாண்மை செய்வது பற்றிய பயிற்சி நடத்தப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து துறைஅலுவலர்களுக்கும் இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் அவர்களின் திறனை மேம்படுத்திட இப்பயிற்சி சிறப்பான முறையில் பயன் தரும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

Spread the love