January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பொங்கல் அறுவடைக்கு கரும்பு சாகுபடி தொடக்கம்

நாமக்கல், மே 5

பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில் கரும்பு சாகுபடி பணியை விவசாயிகள் துவக்கி உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த கரமேடு, சமயசங்கிலி, செங்குட்பாளையம், தொட்டிபாளையம், பேரேஜ் பகுதி, ஆவத்திபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பருவமழை, ஆற்று பாசனம், வாய்க்கால் தண்ணீர், நிலத்தடி நீரை பயன்படுத்தி, இப்பகுதியில் நெல், வாழை, தானிய வகைகள் சாகுபடி செய்யப்படும். இதை தொடர்ந்து ஆண்டு தோறும் பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில் கரும்பு சாகுபடியில் ஈடுபடுவர். இந்தாண்டு தற்போது கரும்பு சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர். சித்திரையில் சாகுபடி செய்யப்பட்டால், சரியாக தை மாதம் துவக்கத்தில் அறுவடை செய்யலாம் என்ற அடிப்படையில் சாகுபடி பணி நடந்து வருகிறது.

Spread the love