June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம்ஏப்ரல் மாதத்தில் ரூ.17,310 கோடியாக அதிகரிப்பு

புது தில்லி, மே 12

நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் ரூ.17,309.54 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொதுக் காப்பீட்டுத் துறையில் ஈடுபட்டு வரும் 33 நிறுவனங்களின் மொத்த பிரீமியம் 2020ம் ஆண்டு ஏப்ரலில் ரூ.14,174.10 கோடியாக காணப்பட்டது. இது, நடப்பாண்டு ஏப்ரலில் 22 சதம் வளர்ச்சியடைந்து ரூ.17,309.54 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும், ஒட்டுமொத்தத்தில் 25 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த பிரீமியம் வசூல் நடப்பாண்டு ஏப்ரலில் ஏறக்குறைய 20 சதம் உயர்ந்து ரூ.15,946.46 கோடியாக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.13,328.16 கோடியாக காணப்பட்டது. தனிப்பட்ட முறையில் 5 பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த பிரீமியம் வசூல் 43 சதம் ஏற்றம் கண்டு ரூ.809.20 கோடியிலிருந்து ரூ.1,259.23 கோடியாக உயர்ந்துள்ளது.

பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மற்றும் இசிஜிசி ஆகியவற்றின் பிரீமியம் கடந்த ஏப்ரலில் 183 சதம் உயர்ந்துள்ளது.
அதன் அடிப்படையில், 2020 ஏப்ரல் ரூ.36.74 கோடியாக காணப்பட்ட இவ்விரு நிறுவனங்களின் பிரீமியம் நடப்பாண்டு ஏப்ரலில் ரூ.103.85 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐஆர்டிஏஐ புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love