August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பொதுத் துறை வங்கிகளின் லாபம் அதிகரிப்பு: மத்திய அரசு

புது தில்லி, டிச.23

ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு பொதுத் துறை வங்கிகளின் லாபம் ஒட்டுமொத்த அடிப்படையில் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதித் துறை இணையமைச்சர் பகவத் கரத் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் இணைப்புக்கு உள்ளான பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் மேம்பட்டுள்ளதுடன், அவை ஈட்டும் லாபமும் ஒட்டுமொத்த அடிப்படையில் உயர்ந்துள்ளது. எஸ்பிஐ வங்கியுடன் அதன் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி இணைப்பு 2017 ஏப்ரல் 1-லிருந்து அமலுக்கு வந்தது. இந்நிலையில், எஸ்பிஐ 2016-17ல் ரூ.1,378. 35 கோடி இழப்பை சந்தித்திருந்த நிலையில், 2020-21ல் ரூ.20,410.47 கோடி லாபத்தை பதிவு செய்தது.பேங்க் ஆஃப் பரோடாவுடன் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளின் இணைப்பு 2019 ஏப்ரல் 1-லிருந்து நடைமுறைக்கு வந்தது. அந்த வங்கி கடந்த 2018-19-இல் ரூ.8,339.27 கோடி இழப்பை கண்டிருந்த நிலையில், 2020-21ல் ரூ.828.96 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதே போன்று, பஞ்சாப் நேசனல் வங்கி, யூனியன் வங்கி, கனரா வங்கிகளும் இழப்பிலிருந்து மீண்டு லாப பாதைக்கு திரும்பியுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love