October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவு

நாமக்கல், அக்.11

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை கல்வி உதவித்தொகை இலவச வீட்டு மனைப்பட்டா வங்கி கடன் உதவி குடிசை மாற்று வாரிய வீடு குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 307 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.7650 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் மற்றும் கண் பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.420 மதிப்பிலான ஒளிரும் மடக்கும் கோல் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ரமேஷ் நகராட்சி ஆணையாளர்கள் வட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love