June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பொது முடக்கத்தால் ரூ.1.5 லட்சம் கோடி பொருளாதார இழப்பு: எஸ்பிஐ தகவல்

புது தில்லி, ஏப்.24

நாட்டின் முக்கிய நகரங்களில் பொது முடக்க உத்தரவுகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இது, கிட்டத்தட்ட, ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என, “ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பொருளாதார பிரிவு அறிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து, எஸ்பிஐ மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஊரடங்குகள் காரணமாக, நாட்டின் மொத்த இழப்பு, ரூ.1.5 லட்சம் கோடியாக இருக்கும். இதில், 80 சத இழப்பு மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருக்கும். மகாராஷ்ட்ராவில் மட்டும், 54 சதம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, எஸ்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அறிக்கை இவ்வாறு தெரிவித்திருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, முந்தைய கணிப்பிலிருந்து குறைத்து அறிவித்துள்ளது, எஸ்பிஐ இதற்கு முன், வளர்ச்சி நடப்பு நிதியாண்டில், 11 சதமாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது, 10.4 சதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

Spread the love