January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பொருளாதார நல்லுறவை மேம்படுத்த இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் உறுதி

அபுதாபி, ஏப்.20

பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவி வரும் நல்லுறவை மேம்படுத்துவதற்கு இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (யுஏஇ) உறுதி ஏற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஸயத் அல் நஹ்யானை சமீபத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சரை சந்தித்துப் பேசினேன். பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையே நிலவி வரும் நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதியேற்றன. கோவிட் தொற்று பரவல் கட்டுக்குள் வந்த பிறகு பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய மக்களும் ஐக்கிய அரபு அமீரக மக்களும் பலன் பெறும் வகையில் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், வர்த்தகம், பொருளாதாரம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான நல்லுறவு மேம்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கரோனா தடுப்பூசிகளை உலக நாடுகள் அனைத்துக்கும் கிடைக்கச் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love