May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 10.1 சதமாக இருக்கும்: இந்தியா ரேட்டிங்க்ஸ்

புது தில்லி, ஏப்.24

நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 10.1 சதமாக இருக்கும் என, இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனம் திருத்தி அறிவித்துள்ளது. இந்நிறுவனம், இதற்கு முன், வளர்ச்சி, 10.4 சதமாக இருக்கும் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கோவிட் பரவல் மற்றும் குறைந்த வேகத்தில் போடப்படும் தடுப்பூசி ஆகியவை வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக, இந்நிறு வனம் தெரிவித்துள்ளது. நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள் ஒரே சமயத்தில் பெரும் அழுத்தத்தை சந்தித்து வருகிறது என்றும், இரண்டாவது அலை, மே மாதத்தின் நடுப்பகுதியில் குறைய துவங்கும் என எதிர்பார்ப்பதாகவும் இந்தியா ரேட்டிங்கஸ் தெரிவித்துள்ளது.

இந்த மாத துவக்கத்தில், ஆர்பிஐ வளர்ச்சி 10.5 சதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது. ஆனாலும், ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், அதிகரித்து வரும் நோய் தொற்று, பொருளாதார மீட்சிக்கு தடையாக இருக்கக்கூடும் என தெரிவித்து இருந்தார். தற்போது பல நிறுவனங்களும், முந்தைய கணிப்பை குறைத்து அறிவித்து வருகின்றன.

Spread the love