January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு0.5 சதம் குறைவு: இக்ரா ஆய்வு

மும்பை, ஏப்.21

நாட்டின் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை இக்ரா ஆய்வு நிறுவனம் 0.5 சதம் குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இக்ரா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு 2021-22ம் நிதியாண்டில் 10 முதல் 11 சதமாக இருக்கும் என முன்னர் இக்ரா கணிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், முதலில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் அதிகமாக காணப்பட்ட கோவிட் 2ம் அலை தொற்று தற்போது பல மாநிலங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது. இதன் காரணமாக, கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல மாநிலங்கள் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றன. இது, பொருளாதார நடவடிக்கையை மீண்டும் தடம்புரளச் செய்துள்ளது.

மேலும், இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முந்தை மதிப்பீட்டை காட்டிலும் 0.5 சதம் குறைந்து 10 முதல் 10.5 சதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love