திருப்பூர், ஜூன் 11
திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு இந்தாண்டில், கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் கேரள மாநில பகுதியிலிருந்து மாம்பழம் வரத்து இருந்தது. இந்நிலையில் கடந்த மே மாதம், கேரள பகுதிகளில் மாம்பழ அறுவடை பணி நிறைவடைந்ததால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள், விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் போதிய வரத்து இல்லாமல், மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட செந்தூரம், மல்கோவா, அல்போன்சா, நீலம் உள்ளிட்ட ரக மாம்பழங்களின் விலை சற்று அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரமாக உள்ளூர் பகுதியிலிருந்து மாம்பழம் வரத்து அதிகமானதால், அதன் விலை குறைய துவங்கியுள்ளது. தென்மேற்கு மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக மாம்பழங்களை விரைந்து விற்பனை செய்வதற்காக, குறைந்த விலைக்கு நிர்ணயம் செய்து வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Spread the love