June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

போக்கோ எம்2 ரீலோடட் சந்தையில் விற்பனைக்கு வந்தது

போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ஒற்றை வேரியண்டில் இந்த சாதனம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.9,499 ஆக இருக்கிறது. ரேம் தவிர்த்து மற்ற அனைத்து அம்சங்களும் போக்கோ எம்2 மாடலில் உள்ளதைப் போன்றே உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பிட்ச் பிளாக் மற்றும் ஸ்லேட் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கிறது. ஃப்ளிப்கார்ட் தளத்தில் கடந்த ஏப்.21 முதல் விற்பனை செய்யப்படுகிறது. துவக்க சலுகையாக பிளிப்கார்ட்டில் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதேபோல் பேங்க் ஆஃப் பரோடா மாஸ்டர் கார்ட், டெபிட் கார்ட்களை முதல் தடவை பரிவர்த்தனை செய்யும் பயனர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் நோ காஸ்ட் இஎம்ஐ ஆக ரூ.1584 என்ற இஎம்ஐ பரிவர்த்தனைகளில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் தெளிவு, 1080×2,340 பிக்சல் துல்லிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி80 எஸ்ஓசி புராஸசருடன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படுகிறது. 64ஜிபி மெமரியுடன் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஒன்றும் தரப்பட்டுள்ளது.

போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 13எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5எம்பி மூன்றாம் நிலை கேமரா மற்றும் 2எம்பி கேமராவுடன் உள்ளது. முன்புறம் 8எம்பி செல்ஃபீ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கைரேகை சென்சார் வசதி உள்ளது.

போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Spread the love