August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகமானது

புதிய எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது போக்கோ நிறுவனம்.
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச், ஃபுல் எச்டி பிளஸ் தெளிவு1080×2400 பிக்சல் துல்லியம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது.

புதிய மாடலில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி சிப்செட் புராஸசருடன் MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும்.

இந்தப் புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி மெமரி உள்ளது. அத்துடன் மெமரி கார்டு ஸ்லாட் உள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ.16,000-ஆகவும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ.17,750-ஆகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் என டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறம் 8எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது. எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் உள்ளன.

மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இடம்பெற்றுள்ளது, கைரேகை சென்சாரும் உள்ளது.

பவர் பிளாக், கூல் ப்ளூ மற்றும் போக்கோ மஞ்சள் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் சந்தைக்கு வந்துள்ளது. இந்தியாவில் இந்த போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் எனத் தெரியவில்லை.

Spread the love