புதிய எம் எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அடுத்த வாரத்தில் அறிமுகம் செய்ய போக்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மே 19ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இணையத்தில் கசிந்த தகவல்களின் படி, போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் தெளிவு, 1080×2400 பிக்சல் துல்லியம், 20:9 திரைவிகிதம், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்ட டிஸ்பிளேவைப் பெற்றிருக்கும்.
சந்தையில் புதுவரவான ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் புராஸசருடன் MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும்.
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது. அத்துடன் மெமரி கார்டு ஸ்லாட் தரப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் என டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறம் 8எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது. அத்துடன் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் உள்ளன.
இந்தப் புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.