May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

போர்ஷே 911 ஸ்போர்ட் லிமிடெட் எடிசன் அடுத்த ஆண்டு அறிமுகம்

புது தில்லி, மே 7

போர்ஷே 911 ஸ்போர்ட் லிமிடெட் எடிசன் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

போர்ஷே நிறுவனம் 911 லிமிடெட் எடிசன் ஸ்போர்ட் கிளாசிக் மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக போர்ஷே 977 மாடலில் ஸ்போர்ட் கிளாசிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 911 கரெரா 2.7 ஆர்எஸ் லிமிடெட் எடிசன் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

போர்ஷே 911 ஸ்போர்ட் கிளாசிக் மாடல் 3.8 லிட்டர் என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த என்ஜின் 408 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிசன் வழங்கப்படுகிறது.

மேலும், இந்த கார் மணிக்கு 302 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

புதிய 992 ஸ்போர்ட் கிளாசிக் மாடலிலும் இதேபோன்ற செயல்திறன் வழங்கும் என்ஜின் எதிர்பார்க்கலாம். இதில் 475 பியஹச்பி பவர், 556 என்எம் டார்க் வழங்கும் 3.0 லிட்டர், ட்வின் டர்போ யூனிட் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love