September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மகசூல் அதிகரித்தும் விலையில்லாததால் தேயிலை விவசாயிகள் கவலை

ஊட்டி, செப்.13

மகசூல் அதிகரித்தும் விலையில்லாததால் தேயிலை விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு ஏற்ற சீதோஷ்ணம் நிலவுவதால், மீண்டும் இலை வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 16 கூட்டுறவு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. சிறு விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர்.
நடப்பாண்டில் பரவலாக பெய்து வரும் மழையால் தேயிலை செடிகளுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை கிடைத்துள்ளது. சராசரியாக இலை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் நிலவரப்படி கூட்டுறவு தொழிற்சாலைகளில், 65 சதவீதம் இலை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, தரமான இலை கொள்முதல் செய்யும் நோக்கில், கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாகம், உறுப்பினர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தேயிலை செடிகளுக்கு ஏற்ற வகையில் மழை பெய்து ஈரப்பதம் ஏற்பட்டிருப்பதால், விவசாயிகள் உரமிட்டு தோட்டங்களை பராமரித்ததால், மீண்டும் இலை வரத்து அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு, 10,000 கிலோவாக இருந்த இலை கொள்முதல் தற்போது, 15,000 கிலோவாக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், இலை வரத்து ஒருபுறம் அதிகரித்தாலும், கடந்த இரண்டு மாதங்களாக பசுந்தேயிலைக்கான விலை படிப்படியாக குறைந்து வருவது கவலையடைய செய்துள்ளது.

Spread the love