விழுப்புரம், மார்ச் 14
ஜே.எஸ்.ஏ வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் விருத்தாசலம் அடுத்த வி.சாத்தமங்கலம் கிராமத்தில் தங்கி பயிற்சிப் பெற்று வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவிற்கு சிப்பிக்காளான் வளர்ப்பு பற்றிய சிறப்பு பயிற்சி அளித்தனர். மாணவி ஸ்.டெசி சிநேகா விளக்கவுறை ஆற்ற சக மாணவிகளாகிய செ.சத்தியப்பிரியா, இரா.சீவகசிந்தாமணி, மு.ஷாலினி, ர.ஷோபனா, பா.ஸ்ரீவிதா, ஜெ.சுவேதா ஆகியோர் காளான் வளர்ப்பு முறையை செயல்படுத்தி காட்டினர். இப்பயிற்சியில் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Spread the love