May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் கோவிட் தொற்று அதிகரிக்கும் சூழல்: வல்லுநர்கள் எச்சரிக்கை

மும்பை, ஏப்.29

மகாராஷ்டிர மாநிலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வடைந்தால் கோவிட் தொற்று மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதால் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளபடி மே 1-ஆம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் தெரிவித்திருப்பதாவது:

மகாராஷ்டிரத்தில் மொத்தம் 9 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டிநிலையில், இதுவரை 1.50 கோடி பேருகக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதை தொடர்ந்து வேகமாக அதிகரிக்க வேண்டியது அவசியம். இல்லையயன்றால் அதுவே கோவிட் தொற்றுக்கு மூன்றாவது அலைக்கு வழிவகுத்துவிடும் என எச்சரித்துள்ளனர்.

ஏனெனில் கடந்த டிசம்பர் மாதத்தில் முதல் அலைக்குப் பிறகு மக்கள் கவனக்குறைவாக செயல்பட்டதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாததும் இப்போதைய மோசமான நிலைக்கு மகாராஷ்டிரத்தை சிக்கவைத்துள்ளது. இப்போது, தடுப்பூசி மட்டுமே உயிரிழப்பைத் தடுக்கும் ஒரே ஆயுதமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தினால் மட்டுமே உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

Spread the love