நேற்றைய தொடர்ச்சி
மகிழமரம் மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும் 10 கிராம் பட்டையை பொடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி தேன் சேர்த்து 50 மில்லியாக காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும் காய்ச்சல் தணியும் மகிழம் காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப் படும் மகிழம் வித்து பருப்பை வேளைக்கு 5 கிராம் அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர தாது விருத்தியாகும் உடல் வெப்பு மலக்கட்டு நஞ்சு ஆகியவை தீரும் பூவை பொடித்து நாசியில் உறிஞ்ச தலைவலி தீரும் மூக்கு வழியே மிகையான நீரை வெளியேற்றும் பட்டையை அரைத்து பற்றுப்போட தோலில் வெடிப்புடன் காணும் படை தீரும்.