மகிழமரம். மரங்களின் வரம் மகிழ மரம். மகிழ மரம் வீட்டின் வாசல் முன் பகுதியில் இருந்தால் போகின்ற காரியம் வெற்றியாக முடியும் என்பது ஐதீகம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் தல விருட்சமாகும் மற்றும் சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகள் திருக்கோயிலின் தல விருட்சம் மகிழ மரம் ஆகும். அடர்த்தியான இலைகளையும் மனதைக் கவரும் இனிய மணமுடைய கொத்தான வெள்ளை மலர்களையும், மஞ்சள் நிற உண்ணக் கூடிய பழங்களையும் உடைய மரம். இலை, பூ, காய், விதை, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பூ, தாது வெப்பு அகற்றும், காமம் பெருக்கும். விதை குளிர்ச்சியூட்டும், தாதுபலம் பெருக்கும். நஞ்சு நீக்கும். பூ 50 கிராம் 300 மில்லி நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும். கருவியில் பல்துலக்கி மகிழ இலை கியாழத்தால், வாய் கொப்பளித்து வர பல் நோய் அனைத்தும் நீங்கும். மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும்.
மகிழமரம்

Spread the love