October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி

விருதுநகர், அக்.11

விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் குடும்ப அட்டை வேலைவாய்ப்பு முதியோர் விபத்து நிவாரணம் மாற்றுத்திறனாளிகள் நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 369 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கட்டாங்குடி ஸ்ரீசெளடாம்பிகை மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.743000/- வீரசோழன் அன்னை இந்திரா மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.535000/- கல்லூரணி பாரதி(பி.எம்.எஸ்) மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.450000/- சிந்துவம்பட்டியைச் சேர்ந்த மகிழம்ப10 மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.561600/- செம்பருத்தி மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.315000/- மன்னார்கோட்டையைச் சேர்ந்த ரோஜா மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.600000/- மல்லிகை மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.550000/- ஓம் பராசக்தி மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.450000/- விநாயகா மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.198000/- என மொத்தம் 9 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4402600/- மதிப்பிலான வங்கி இணைப்பு கடனுக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார்.

Spread the love