October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மக்காசோளம் சாசாகுபடி முறைகள்

மக்காசோளம் சாகுபடி முறைகள் தானிய பயிர்களில் மிகவும் அதிக சத்துக்கள் நிறைந்த பயிர் மக்காசோளம் பயிர் என்று சொல்லலாம். நமது கோயம்புத்தூர் மாவட்டத்தில் மக்காசோளம் 10,000 ஏக்கர் பரப்பில் சிறந்த முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. தானியங்களின் இராணியாகவும் தமிழகத்தில் நெல், கோதுமை அடுத்ததாக பயிரிடப்படும் உணவு பயிர், மக்காசோளம். மக்காசோளம் நீர்வளம், மண் வளம் குறைந்த இடங்களிலும் செழித்து வளரக் கூடியது. மக்காசோளம் தானியமாக மட்டுமல்லாமல் சிறந்த கால்நடைத் தீவனமாகவும் உள்ளது. சந்தையில் அதிக வரவேற்கப்படும் இந்த மக்காசோளத்தை விவசாயிகள் பயிரிடுவதால் அதிக லாபம் பெறலாம்.

இரகம் & பருவம் :

வீரியம் ஒட்டு இரகம், போன்ற இரகங்கள் மக்காசோளம் பயிர்சாகுபடி முறைக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த இரகம் மானாவரியில் ஆடிப்பட்டம், புரட்டாசி, தைப்பட்டம், இறைவையில் ஆடிப் பட்டம், புரட்டாசி பட்டங்களிலும் பயிரிடலாம்.

விதை அளாவு :
ஒரு ஏக்கருக்கு 20 கிலோவும் வீரிய ஒட்டு இரகத்திற்க்கு 25 கிலோ விதை தேவைப்படும். விதைகளை 4 செ.மீ அழத்தில் நடவேண்டும்.

விதை நேர்த்தி:
ஒரு கிலோ விதையுடன் சையாண்டரினிலிபுரோல்19.8+ தியோமெந்தாக்சம் 19.8-4ml மருந்துடன் கலத்தும் அல்லது விதைப்பதற்கு சற்று முன்பு அசோஸ்பைரில்லம், பாஸ்போபக்டிரியா உடம்கலந்து பின்பு விதைக்க வேண்டும்.

பயிர் இடைவேளி:
விதைப்பு வரிசைக்கு வரிசை 45 செ.மீட்டர் இடைவெளியும், செடிக்கு செடி 20 செ.மீட்டர் இடைவெளியும் விட வேண்டும்.

உர அளவு:
ஒரு ஏக்டருக்கு தொழு உரம் 12.5 டன்னுடம், வேப்பம் புண்ணாக்கு 250 கிலோவை கடைசி உழவிலும், தழைச்சத்து 135 கிலோ, மணிச்சத்து 62.5 கிலோ சாமல் சத்து 50 கிலோ இட வேண்டும். நுண்ணூட்ட சத்து குறைபாட்டை தடுக்க தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை வழங்கும் நுண்ணூட்ட கலவை 12.5 கிலோவை 40 கிலோ மண்ணுடம் கலந்து இட வேண்டும்.

களைகள் நிவாகம்:

மக்காசோளம் விதைத்த 15,30-வது நாட்களில் களையெடுக்கும் சமயத்தில் பயிருக்குப் பயிர் 20 செ.மீட்டர் இடைவெளி இருப்பது போல் களை எடுக்க வேண்டும். அல்லது களைகொல்லி மூலம் கட்டுப்படுத்த விதைத்த 3ம் நாள் மற்றும் ,25-30 நாட்களில் அட்ரசின் 250 கிராமை 500 லிட்டை நீரில் கலந்து மண்ணில் ஈரப்பதம் இருக்கும் போது தெளிக்க வேண்டும். ஊடுபயிராக பயறு வகை பயிராக இருந்தால் அட்ரசின் பபயன்படுத்தக்கூடாது.

நீர் நிர்வாம்;

மக்காசோளம் பயிருக்கு நீர் தேங்கக்கூடாது. முளைக்கும், பூக்கும், வளர்ச்சி போன்ற தருணத்தில் தேவைக்கு ஏற்ப நீர் பாசனம் செய்ய வேண்டும் அல்லது சொட்டு நீர் பாசனம் செய்யலாம்.

ஒருங்கினைந்த பயிர் நோய் மற்றும் பூச்சி பாதுக்காப்பு முறை:
குருத்து ஈ,அசுவிணி, கட்டுப்படுத்த 5% வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்க வேண்டும். அமேரிக்கம் படைப்புழவை தாக்குதலில் இருந்து பாதுகாக்க 15-20 நாளில் நவல்யூரன், 40-20 நாளில் ஸ்பைனிடோம் 11.7 60-நாளில் பிளுபெண்டமைட் போன்ற மருத்தை தெளித்தும் வரப்பு பயிராக தட்டை, துரை பயிரை பயிரிடலாம். விளக்கு பொறி 12 எக்கருக்கும் நிறுவ வேண்டும். அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 500 கிராம் மெட்டாலாக்சில் அல்லது 1 கிலோ மேன்கோசெப்பை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். தேன் ஒழுகல் நோயினை கட்டுப்படுத்த மெட்டாலாக்சில் அல்லது கார்பெண்டசிமை பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். துருநோயைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு நனையும் கந்தகம் 2.5 கிலோ அல்லது மேன்கோசெப் 1கிலோ தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் 10 தினங்களுக்கு ஒரு முறைதெளிக்க வேண்டும்.

அறுவடை:
இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தைத் தரும். தானியங்கள் கடினமாகும். அப்போது கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும்.

மகசூல்:

இந்த முறையில் பயிரிட்டால் மானாவாரியாக 4.5 டன்னும் இறவையாக 7-7.5 டன் வரை மகசூலை விவசாயிகள் நல்ல லாபம்.

மேற்கண்ட தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்தல் மக்காசோள பயிர்களில் அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் இரா.சித்ராதேவி, தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டத்தின் தொழில் நுட்ப உதவியாளர் கா.சூர்ய பிரகாஷ் ஆகியோர் தெரிவித்துள்ளார்.

Spread the love