October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு தடுக்க எடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள்

விருதுநகர், அக்.6

விருதுநகர் மாவட்டத்தில் 30,000 எக்டேர் மக்காச்சோளப் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. படைப்புழு தாக்குதல் இனிப்பு மக்காச்சோளம், நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை மற்றும் சிறுதானிய பயிர்களிலும் காணப்படும். படைப்புழு ஆறு நிலைகளில் வளரக்கூடியது. தாய்ப்புழு 100 முதல் 200 வரை முட்டைகளை குவியலாக இடும். பொரும்பாலும் இலைகளின் அடிப்பகுதியில் இடும். காற்று வழியாக ஒரு செடியில் இருந்து இன்னொரு செடிக்கு பரவும். இரவு நேரங்களில் அதிக சேதத்தை உருவாக்கும். மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழு கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்ற வேண்டும். படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு செய்தபின், கடைசி உழவின் போத 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை ஒரு ஏக்கருக்கு இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு நான்கு மில்லி சைன்டரினிலிபுரோலினை தியோமெந்தக்சம் மருந்துடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஊடுபயிராக தட்டைப்பயறு, எள், சூரியகாந்தி, துவரை உள்ளிட்ட பயறு வகைகளை பயிரிட்டால் படைப்புழு பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ச.உத்தண்டராமன் தெரிவித்தார்.

Spread the love