May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு

பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் சில சமயங்களில் தங்கள் தாயத்திலிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவி தாக்குதல் உண்டாக்குவது உண்டு. அவை காற்றின் மூலமாகவோ, விதை, தானியம், கன்றுகள் வாயிலாகவோ மற்ற இடங்களுக்கு பரவுவதற்கு வாய்ப்புள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய அளவில் மிக முக்கிய மற்றும் அதிக மகசூலைப் பாதிக்கும் பூச்சியாக உருவெடுத்துள்ளது @பால் ஆர்மிவார்ம் என்ற புதுவகைப் படைப்புழுவாகும். இதன் விஞ்ஞானப் பெயர் ஸ்போடாப்டிரா ப்ரூஜிபெர்டா என்பதாகும்.

@பால் ஆர்மிவார்மின் தாயகம் க்ஷ பரவியுள்ள பகுதிகள்
அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட @பால் ஆர்மிவார்ம் என்ற படைப் புழுவானது முதன் முதலாக அதன் தாயத்தைத் தாண்டி ஆப்பிரிக்க நாடான நைஜுரியாவில் ஜனவரி 2016ஆம் ஆண்டு மக்காச்சோளத்தைத் தாக்குவது கண்டறியப்பட்டு தற்போது வரை 44 ஆப்பிரிக்க நாடுகளில் பரவி அக்கண்டத்தின் மிக முக்கிய உணவுப் பயிரான மக்காச்சோளத்தில் மிகுந்த மகசூல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தாக்குதல்
இந்தியாவில் மக்காச்சோளத்தல் இந்த படைப்புழுவின் தாக்குதல் முதன் முதலாக கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியில் கண்டறியப்பட்டு தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் இதன் தாக்குதல் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாக்கும் பயிர்கள்
இந்த படைப்புழுவானது மக்காச்சோளம் மட்டுமின்றி சோளம், நெல், கரும்பு, பருத்தி, சோயா, கடலை, கோதுமை, வெங்காயம், முட்டைக்கோசு, உருளைக்கிழங்கு, தக்காளி, சிறுதானியப் பயிர்கள் உள்ளிட்ட 80 வகையான பயிர்களைத் தாக்கி சேதத்தைஉண்டாக்கும் ஆற்றல் கொண்டது.

முட்டை
பெண் அந்துப்பூச்சியானது இரவு நேரங்களில் 100 முதல் 200 முட்டைகளைக் குவியலாக இலைகளின் அடிப்புறத்தில் இட்டு அதனை ரோமங்களால் மூடி பாதுகாப்பாக வைத்திருக்கும். ஒரு பெண் அந்துப் பூச்சியானது தன் வாழ்நாளில் சராசரியாக 1500 முட்டைகள் வரை இடும் ஆற்றல் கொண்டது. முட்டைப் பருவமானது 2 முதல் 3 நாட்களாகும்.

படைப்புழு
புழுப் பருவமானது ஆறு நிலைகளைக் கொண்டது. இளம் புழுவானது பச்சை நிறத்தில் கருப்பு நிறத் தலையுடன் காணப்படும். நன்கு வளர்ந்த புழுவின் தலையானது பழுப்பு கலந்தசிவப்பு நிறத்துடன் காணப்படும். இதன் முகப் பகுதியில் மஞ்சள் நிறத்தில ஆங்கில எழுத்து “லு” ஐ திருப்பிப் போட்டது போன்று அடையாளம் காணப்படும். புழுவின் வால் பகுதியில் நான்கு புள்ளிகளுடன் சதுரம் போன்ற அமைப்புடன் தோற்றமளிக்கும். முதிர்ந்த புழுவானது 3 முதல் 4 செ.மீ. நீளத்தில் இருக்கும்.

கூட்டுப்புழு
படைப் புழுவானது பின்பு 2 முதல் 8 செ.மீ. ஆழத்திற்கு மண்ணிற்குள் சென்று கூட்டுப் புழுவாக மாறிவிடும். கோடை காலங்களில் கூட்டுப்புழு பருவமானது 8 முதல் 9 நாட்களும், குளிர் காலங்களில் 20 முதல் 30 நாட்களும் ஆகும்.

அந்துப்பூச்சி
கூட்டுப் புழுவிலிருந்து வெளி வரும் அந்துப்பூச்சிகள் இரவு நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவை. இவற்றின் உடலின் நீளமானது 16 மிமீ ஆகும். இறக்கைகள் விரிக்கும் போது 32 முதல் 40 மிமீ நீளமுடையது. முன்னிறக்கைள் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும், இறக்கையின் நுனி மற்றும் மத்தியப் பகுதிகளில் வெள்ளைநிற முக்கோண அமைப்பில் காட்சியளிக்கும். பின்னிறக்கைகள் வெள்ளி நிறத்துடன் ஓரங்களில் அடர் பழுப்பு நிறக் கோட்டுடன் காணப்படும். வளர்ந்த அந்துப்பூச்சியின் வாழ்நாள் சராசரியாக 10 நாட்களாகும். மேலும் தட்பவெப்ப நிலைக்கேற்ப 7 முதல் 21 நாட்களுமாகவும் இருக்கும்.

மொத்த வாழ்நாட்கள்
தட்பவெப்பநிலை சராசரியாக 28 செல்சியஸ் இருக்கும் பொழுது இந்தபடைப் புழுவின் மொத்த வாழ்நாளானது 30 முதல் 40 நாட்களாகும். குளிர் காலங்களில் 60 முதல் 90 நாட்கள் வரை இதன் வாழ்நாள் நீடிக்கும். மேலும் இவை 500 முதல் 1000 கிலோமீட்டர் தூரத்தை 15 நாட்களில் கடக்கும் ஆற்றல் பெற்றவை.

பாதிப்பின் அறிகுறிகள்
இளம் புழுக்கள் அதிகமாக இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டித் தின்று சேதத்தை விளைவிக்கும். இதனால் இலைகளில் பச்சையம் இல்லாமல் வெண்மையாகக் காணப்படும். மூன்றுமுதல் ஆறாம் நிலைப் புழுக்கள் இலையுறையினுள் சென்று கடித்துண்டு பாதிப்பை உண்டாக்கும். அதனால் இலைகள் விரியும் போது வரிசையாக சிறு துளைகள் போன்று காணப்படும். மேலும் புழுவின் கழிவுகளும் காணப்படும். 20 முதல் 40 நாட்களுடைய இளம் பயிரையே இவை அதிகமாகத் தாக்கும் வல்லமை கொண்டவை.

மேலாண்மை முறைகள்
ஆழ் உழவு – ஆழ் உழவு மற்றும் கடைசி உழவில் வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ
விதைநேர்த்தி – தையோமீத்தாக்ஸாம் – 30 எப்.எஸ் – 10 கிராம் அல்லது பிவேரியாபெஸ்ஸியானா 10 கிராம் ஒரு கிலோ விதைக்கு
இடைவெளி – 10 வரிசைக்கு ஒரு வரிசை விதைக்காமல் இடைவெளி
இனக்கவர்ச்சிப் பொறி – அதிகளவில் ஆண் பூச்சிகளை கவர, இனக்கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் விதைத்த ஒரு வாரத்திற்குள் வைத்தல்.
வரப்புப் பயிர்கள் – தட்டைப்பயிர், சு{ரியகாந்தி, எள்
ஊடுபயிர்கள் – உளுந்து, பாசிப்பயறு

பூச்சிக் கொல்லி மருந்துகள்
முதல் முறை (15-20 நாட்கள்)
· அஸாடிராக்டின் 1% EC – 20 மிலி
· தையோடிகார்ப் 75% WP – 20 கிராம்
· எமாமெக்டின் பென்ஸோnய்ட 5% SG – 4 கிராம்
இரண்டாம் முறை (40-45 நாட்கள்)
· மெட்டாரைசியம் அனிசோபிலியே– 80 கி
· ஸ்பைனிடீரோம் 11.7 % SC– 5 மிலி
· குளோராண்ட்ரானிலிப்ரோல் 18.5 EC – 4 மிலி
· புளுபென்டியமைடு 480 SC – 4 மிலி
· நோவலூரான் 10 EC – 15 மிலி

ஏதாவது ஒரு மருந்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் தெளிக்கவும். தேவைப்பட்டால் கதிர் பிடிக்கும் பருவத்தில் இரண்டாவது முறைக்கு பரிந்துரைக்கப்பட் பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஒன்றை சுழற்சி முறையில் உபயோகிக்கவும்.

முனைவர் த.செந்தில்குமார், முனைவர் கோ.நெல்சன் நவமணிராஜ், முனைவர் அ.ப.சிவமுருகன் மற்றும் முனைவர் வீ.மு.இந்துமதி, வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை – 622 303.

Spread the love