ஈரோடு, மார்ச் 28
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை, ஈரோடு மாவட்டம் இணைந்து நடத்திய மக்காச்சோளப் படைப்புழு ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்த ஒரு நாள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் கண்காட்சி அந்தியூர் வட்டம் அத்தாணியில் 25.03.2022 அன்று நடைபெற்றது. இக்கண்காட்சியை நூற்றுக்கு மேற்பட்டோர் கண்டுணர்ந்து பயன் பெற்றனர். இவ்விழாவிற்க்கு வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ந.சக்திவேல் தலைமையேற்றார்கள். அந்தியூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கார்த்திகேயன், அந்தியூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ப.மரகதமணி சிறப்புரையாற்றினார். கருத்துக்காட்சியில் மக்காச்சோளத்தில் படைப்புழுவினால் ஏற்படும் சேத நிலைகள், விதை நேர்த்தி தொழில்நுட்பம், புழுக்களின் பருவ நிலைகள், மேலாண்மைக்கான இடுபொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன. தொழிட்நுட்ப உரையில் மக்காச்சோளப் படைப்புழு மேலாண்மையில் உழவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் இனக்கவர்ச்சி பொறி தொழில்நுட்பம் மற்றும் பருவம் சார்ந்த பூச்சிக்கொல்லி தெளிப்பு முறைகள் குறித்து கணேசன் விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் சத்துமிகு சிறு தானியங்கள் குறித்த வாகன விழிப்புணர்வினை அந்தியூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கார்த்திகேயன், அந்தியூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ப.மரகதமணி ஒருங்கிணைந்து துவக்கி வைத்தார். இக்கருத்துக்காட்சியை இருபதுக்கும் மேற்பட்ட இறுதியாண்டு இளங்கலை மாணவ, மாணவிகளும் பார்வையிட்டன. இந்நிகழ்சிக்கான ஏற்பாட்டினை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் க.கணேசன் ஏற்பாடு செய்தார்.
Spread the love