கோவை, மார்ச் 15
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி 29.03.2022 மற்றும் 30.03.2022 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
கீழ்கண்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்.
· மசாலா பொடிகள்
· தயார்நிலை பேஸ்ட்
· காளான் ஊறுகாய்
· வாழைப்பூ ஊறுகாய்
· பாகற்காய் ஊறுகாய்
· கத்தரிக்காய் ஊறுகாய்
· வெங்காய ஊறுகாய்
ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி கட்டணமாக ரூ.1770/- செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடைபின் சார் தொழில்நுட்ப துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம், கோவை, தொலைபேசி எண் : 0422 – 6611268 தொடர்பு கொள்ளலாம்.
Spread the love