July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மஞ்சளாறு அணை நீர்மட்டம் 51 அடியாக உயர்வு: முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

தேனி, மே 21

மஞ்சளாறு அணை நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்துள்ள நிலையில், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை நீர்மட்டம் மழையால் வியாழக்கிழமை மாலை 51 அடியாக உயர்ந்ததால் பொதுப்பணித்துறையினர் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அணை மொத்த உயரம் 57 அடியாகும். மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து உள்ளது. மே மாத துவக்கத்தில் 42 அடியாகவும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் மே 9ல் 46 அடியாகவும் இருந்தது. மே 19ல் 49.50 அடியாகவும், மே 20 அன்று காலை 50.60 அடியாக இருந்த நிலையில் மழை பெய்ததால் மாலையில் 51 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 205 கனஅடி நீர் வரத்து உள்ளது.

எனவே, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் கணவாய்பட்டி, வத்தலக்குண்டு, குன்னுவாரன்கோட்டை, சிவஞானபுரம் கிராமங்கள் வழியாக மஞ்சளாற்றில் அதிகம் தண்ணீர் கடந்து செல்கிறது. எனவே, கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென பொதுப்பணித்துறையினர் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love