October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு

சென்னை, அக்.12

மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளில் இருந்து வரும் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது : தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசனம் பெறும் வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு நீர்த்தேக்கத்திலிருந்து 15-ந் தேதி முதல் 152 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 2111 ஏக்கர் ஆக மொத்தம் 5259 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து முதல் போகமாக 1825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், 1040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து அக்டோபர் 15ந் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 15ந் தேதி வரை முதல் 62 நாட்களுக்கு விநாடிக்கு 30 கனஅடி வீதமும், அடுத்த 31 நாட்களுக்கு விநாடிக்கு 27 கனஅடி வீதமும், கடைசி 59 நாட்களுக்கு விநாடிக்கு 25 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 2865 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Spread the love