January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மஞ்சள் ஏலத்துக்கு அனுமதி வழங்க வலியுறுத்தல்

ஈரோடு, மே 6

கரோனா பரவல் கட்டுப்பாடு என்ற பெயரில், புதிய மஞ்சள் அறுவடை, ஏலம், குடோனுக்கும் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும் என்று அறிவித்தால், மஞ்சள் வீணாகிப்போகும் என்பதால், விலக்கு அளிக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் விவசாயிகள் கூறுகையில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது. இதற்காக இருப்பில் உள்ள மஞ்சளும், தற்போது நடக்கும் அறுவடையின் புதிய மஞ்சளையும் குடோனுக்கும், ஏலத்துக்கும் விவசாயிகள் கொண்டு வருகின்றனர். தற்போதைய கரோனா பரவல் தடைகளால், புதிய மஞ்சள் அறுவடை, பிராசஸ் செய்தல், அறுவடை செய்த புதிய மஞ்சளை குடோன் மற்றும் ஏலத்துக்கு கொண்டு வர தடை விதிக்கக்கூடாது. தற்போது கிராமப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதிய மஞ்சளை பாதுகாப்பாக வைக்காவிட்டால் அவை வீணாகிவிடும். அதுபோல, கிருமி நாசினி என்ற நிலையில் மளிகை கடைகளுக்கும், மருந்து உற்பத்திக்கும், பிற மாநில உணவு பொருட்கள் தேவைக்கும் அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மஞ்சள் ஏலம் அரசின் விதிகளின் கீழ் நடத்தப்படுகிறது. சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்தாண்டு ஊரடங்கின்போது கூட, சில நாட்கள் மட்டுமே ஏலத்துக்கு தடை விதித்த போதும், தளர்வின் முதல் பட்டியலில் மஞ்சள் ஏலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. எனவே, அதேபோன்று தற்போதும், ஏலத்துக்கு தடை விதிக்காமல் புதிய மஞ்சளை எடுத்து செல்ல கட்டுப்பாடு செய்யாமல் அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

Spread the love