August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மஞ்சள் ரூ.57 லட்சத்திற்கு வர்த்தகம்

நாமக்கல், மே 5

நாமகிரிப்பேட்டையில், ரூ.57 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில் ஆர்.சி.எம்.எஸ்.,ற்கு சொந்தமான மஞ்சள் மண்டி உள்ளது. இங்கு, செவ்வாய்கிழமை தோறும் மஞ்சள் ஏலம் நடப்பது வழக்கம். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், ரூ.6,863, அதிகபட்சம், ரூ.9,199, உருண்டை ரகம், குறைந்தபட்சம், ரூ.6,699, அதிகபட்சம், ரூ.8,209, பனங்காலி ரகம், குறைந்தபட்சம், ரூ.14,569, அதிகபட்சம், ரூ.18,002க்கு ஏலம் போனது. மொத்தம், 1,150 மூட்டைகள், ரூ.57 லட்சத்திற்கு விற்பனையாகின.

Spread the love