May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மணித்தக்காளி

மணித்தக்காளி நீள்வட்ட வடிவமான இலைகளையும்இ கோணல் மாணலாக கிளைகளையும்இ வெண்ணிற சிறு பூக்களாலுமான பூங்கொத்தும், பச்சை நிற உருண்டை காய்களையும், கருநீல நிற பழங்களையும், உடைய குறுஞ்செடி. கீரையாக தமிழகமெங்கும் வளர்கிறது. இலை, காய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. உடல் தேற்றுதல், வேதனை தணித்தல், இதயத்தை பலப்படுத்தும், சிறுநீர் பெருக்குதல், மலமிளக்கி, கோழையகற்றுதல், வியர்வை பெருக்குதல், பதட்டம் தணித்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது. இதை கீரையாக சமைத்து உண்ணலாம். 200 மில்லி இலைச்சாறு காலையில் மட்டும் நாள்தோறும் பருகி வர கல்லீரல் வீக்கம், செதில்படை, கரப்பான், ரத்தக் கசிவு, மூலம் ஆகியவை தீரும். இலையை அரைத்து பற்று போட அழுகும் புண்கள், அடி வயிற்றுவலி, புரையோடிய புண்கள், தீப்புண், அக்கி, மூட்டுவலி, கணுச்சூலை ஆகியவை தீரும். இலையை வதக்கிக் கட்ட விரை வீக்கம் வலி ஆகியவை குணமாகும். காயை அரைத்து படர்தாமரைக்கு பூச நல்ல குணம் உண்டாகும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love