June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண்ணின் பயன்களும் அதன் மேலாண்மை மற்றும் திட்டங்கள் குறித்து வேளாண் துறையினரின் பயிற்சி

சிவகங்கை, ஏப்.8

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலமாக 2021-22ம் ஆண்டு தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் மேலமணக்குடி கிராமத்தில் நடத்தப்பட்டது. இப்பயிற்சிக்கு ந.சண்முகஜெயந்தி, வேளாண்மை உதவி இயக்குநர் முன்னிலை வகித்து பேசுகையில், மண் மாதிரிகள் சேகரிக்கும் முறைகள் பற்றியும், மண் வளங்களை பாதுகாப்பதில் உயிர் உரங்களின் முக்கியத்துவம், மண்வள அட்டையின் அடிப்படையில் உரமிடுவது, தென்னையில் பு+ச்சி மற்றும் நோய் மேலாண்மை, நுண்ணீர் பாசனம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.

மணிவண்ணன், ஓய்வு பெற்ற துணை வேளாண்மை அலுவலர் கூறுகையில், மண் மாதிரி ஏக்கருக்கு 10-15 இடங்களிலிருந்து ஒரு மண் மாதிரி எடுக்க வேண்டும் எனவும், மண் வெட்டப்பட்டுள்ள குழியின் இருபக்கங்களின் கீழாக 1 முதல் 2 அங்குல கனத்தில் “ஏ” வடிவில் மண்ணை செதுக்கி எடுக்க வேண்டும். பின் சேகரித்த மண்ணை கால் பாகமாக பங்கீட்டு முறையில் அரை கிலோ மண் வரும் வரை பங்கீடு செய்து துணிப்பையில் சேமித்து விவசாயியின் முகவரி எழுதி வேளாண்மைத்துறை மண் ஆய்வகத்தில் கொடுக்குமாறு விரிவாக கூறினார்.

ஐ.பிரியா பொன் காயத்ரி, வேளாண்மை அலுவலர், வேளாண்மைத் துறையில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இரசாயன உரங்களையும், பூச்சி மருந்துகளையும் தவிர்க்குமாறு கூறினார். மேலும் பசுந்தழை மற்றும் பசுந்தாள் மண்புழு உரம் போன்ற உயிரி உரங்களிடுமாறும், வேப்பங்கொட்டை சாறு, புண்ணாக்கு, வேப்பஎண்ணெய் பூச்சி மருந்தாக பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதிக்கப்படாது என விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

உதவி வேளாண்மை அலுவலர் ஐ.சோலைராஜன், மண்ணின் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு நெல் – உளுந்து – நிலக்கடலை – கரும்பு என பயிர் மறுசுழற்சி செய்யுமாறு எடுத்துரைத்தார். அதிக ஆழமான உழவு செய்வதனால் மண்ணில் காற்றோட்டம் எளிதாகிறது எனவும், கோடை உழவு முடிந்த உடன் பயிரிட்டுவிட்டு அதன்பின்பு சற்று இறுகிய மண்ணிலும் வளரக்கூடிய தாவரங்களை வளர்க்கலாம். எ.கா: உருளைக்கிழங்கு / முள்ளங்கி / சர்க்கரை வள்ளிக்கிழங்கு / கரும்பு-உளுந்து / பச்சைப் பயிறு / பசுந்தாள் உரப் பயிர்கள்).

உதவி வேளாண்மை அலுவலர் ஐ.சோலைராஜன், இப்பயிற்சி கலந்து பயன்பெறுவதற்கு விவசாயிகளை ஏற்பாடு செய்து இப்பயிற்சியின் முடிவில் நன்றி கூறினார்.

Spread the love