May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண்ணிற்கு ஜீவனளிக்கும் ஜீவாமிர்த கரைசல்

மதுரை, மார்ச் 15

மதுரை வேளாண் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகளான க.சத்தியபிரபா, ந.ரம்யா, ப.ரிஸ்வானா, சி.சாய்பிரசன்னா, ப.சந்தியா, ம.சங்கீதா ஆகியோர் அவர்களது ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் அருப்புக்கோட்டையில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் ஜீவாமிர்த கரைசல் தயாரிக்கும் முறை பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

தயாரிக்கும் முறை :

200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ மாட்டுச்சாணம், 10 லிட்டர் கோமியம், 2 கிலோ நாட்டுச்சர்க்கரை அல்லது 4 லிட்டர் கரும்புச்சாறு, 2 கிலோ பயறு மாவு, ஒரு கைப்பிடி அளவு மண் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனை 2 நாட்கள் நிழலில் வைத்து காலை, மதியம், மாலை என மூன்று வேளை நன்றாக குச்சியை வைத்து கலக்கினால் மூன்றாவது நாள் ஜீவாமிர்தம் தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு தெளிக்க 1 லிட்டர் கரைசலை 10 லிட்டர் நீரில் கலந்து பயன்படுத்த வேண்டும் என வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

Spread the love