June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண்ணில்லா விவசாயம் (HYDROPONICS)

இந்தியாவின் “முதுகெலும்பு விவசாயமும் விவசாயிகளும்” தான். அனைத்து தொழில்களுக்கும் முன்னோடியாக விளங்குவது வேளாண் தொழில் ஆகும். விவசாயத்தைப் பொறுத்தவரை பல்வேறு தொழில் நுட்பங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்திற்கு மிகவும் அடிப்படையாக இருப்பது தண்ணீர் மற்றும் மண்ஆகும். ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) முறை என்பது ஒரு மண்ணில்லா விவசாய முறையாகும். மண் இல்லாத விவசாயமா? என்ற கேள்வி உங்கள் அனைவர் மனதிலும் எழுந்திருக்கும். ரசாயன உணவு கொண்டு நீரில் வளரும் செடிகள் ஆகும். இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தற்போது பல பேர் விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை அடைந்து வருகின்றனர்.

தேவையான பொருட்கள் :
 பி.வி.சி பைப் ( pvc pipe)
 தேங்காய் நார் துகள்கள் ( coir pith)
 போதுமான அளவு தண்ணீர் வசதி
 பசுமை குடில் ( green shade net )
 பிளாஸ்டிக் கப்

பயிர்கள் வளர்க்கும் முறை:

ஹைட்ரோபோனிக்ஸ் அமைக்க தேர்வு செய்த இடத்தில் பி.வி.சி பைப்களில் குறிப்பிட்ட இடைவெளியில் வட்ட வடிவ துளைகள் இடவும். அதன் பின்பு சல்லடை போன்ற பிளாஸ்டிக் கப்களை வைக்கவும். அந்த பிளாஸ்டிக் கப்பில் தேங்காய் துகள்களை நிரப்பி அதில் இரண்டு விதைகளை நிரப்ப வேண்டும். தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்க தேங்காய் நார் துகள்கள் இந்த செடிகளுக்கு பக்க பலமாக உள்ளது. இந்த விவசாயத்தில் வேர் பகுதிக்கு நேரிடையாக நீர் வழங்கப்படுகிறது. நீரில் ஆக்சிஜன், பொட்டன்ஷியல் ஹைட்ரஜன், மற்றும் பயிர் வளர்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நீரில் இருக்கவேண்டும். வேர்பிடிக்கும் காலகட்டத்தில் ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீர் மற்றும் ஒரே மாதிரியான தட்ப வெப்பநிலை இருக்குமாறுபார்த்துக்கொள்ளவேண்டும். பிறகு செடிகள் வேர் விட்டதும் இரண்டாவது கட்டமாக நிகர பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. குறைந்த நாட்களில் மிகவிரைவாக அறுவடைக்கு வந்து விடும்.

ஊட்டச்சத்து இடும் முறை :
செடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நீருடன் கலந்து செலுத்தும் போது செடிகள் நன்கு செழித்து வளர்கிறது.

சிறப்பம்சங்கள் :
➢ தண்ணீர் பயன்பாடு பெருமளவு குறைகிறது. இதிலிருந்து வெளியேறும் நீர் மறு சுழற்சி செய்வதன் மூலம் மீண்டும் செடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
➢ பசுமை குடில்களில் வளர்க்கும் போது பறக்கும் பூச்சிகளினால் ஏற்படும் நோய்கள் எதுவும் வருவதில்லை.
➢ பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்கள் இல்லாத இயற்கை விவசாயம் செய்யலாம்.
➢ மற்ற விவசாய முறைகளுடன் ஒப்பிடுகையில் உற்பத்தி செலவு மிகக்குறைவு.
➢ இந்த முறை விவசாயத்தில் களைகள் அகற்ற வேண்டிய அவசியம் இல்லை.
➢ குறைந்த நாட்களில் மிக விரைவாக அறுவடைக்கு வந்துவிடும்.

என்னென்ன பயிர்களை பயிரிடலாம் :
ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயிகள் கீரை வகைகள், பட்டாணி, தக்காளி, வெள்ளரிகள் மற்றும் கோஸ் போன்ற காய்கறிகள் அடங்கும். உங்கள் சிறிய வீட்டு அடிப்படையிலான ஹைட்ரோபோனிக் அமைப்புகளுக்கு துளசி, புதினா, போன்றவற்றை வளர்க்கலாம்.

விளைநிலங்கள் எல்லாம் அதிக படியான ரசாயனத்தால் உயிர் தன்மை இழந்து மலடாகி வருகின்றன. மண்ணில்லா விவசாயம் மட்டுமே மாற்றாகவும் சரியான தீர்வாகவும் இருக்கும் என்பதே பலரின் கருத்து. நிலங்களை சிதைக்காமல், இயற்கையை சேதப்படுத்தாமல் ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ விவசாயத்தை ஊக்குவிப்போம்.

மேலும் விவரங்களுக்கு : க.மாலதி, மின்னஞ்சல்: malathiganapathi18401@gmail.com, இளங்கலை வேளாண் இறுதியாண்டு மாணவி, ஆர்.வி.எஸ். வேளாண்மைக்கல்லூரி, தஞ்சாவூர்.

Spread the love