May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண்ணைக் காக்கும் உத்தி தான் பயிர் சுழற்சியா? ஆம்

பயிர் வளர வளர விவசாயிகளுக்கு வரவுதான். ஆனால் ஒரே நிலத்தில் ஒரே பயிர் தொடர்ந்து சாகுபடி கூடாது. அது தவறு பலவித உத்திகள்மூலம் மண்ணை காத்தாலும் இந்த மோனோக்ராப்ஸ் எனும் தவறான உத்தி மண்ணில் குறிப்பிட்ட சத்துக்கள் கிடைக்காமல் செய்வது மட்டுமல்ல பலவித பூச்சிநோய் பெருக்கம் ஏற்படவும் வெகு விரைவில் உச்சகட்ட மகசூலுக்குப் பதில் சராசரி மகசூல்கூட வராமல் போகலாம்.

என்னதான் நாம் காரணம் கூறி நெல்லுக்குப்பின் நெல்தான் ஒரே வழி என்று வாதிட்டாலும் பலவித நன்மைகள் பெறுவதால் பயிர்சுழற்சியை தவறாது கடைபிடிக்க வேண்டும்.

ஒருநிலத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள பயிர் வகைகளை ஒரு குறிப்பி;ட காலவரையறைக்குள் ஒன்றன்பன் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட திட்டபடி சாகுபடி செய்யலாம். இதற்கு பயிர் சுழறசிமுறை என்று பெயர்.

பயிர் சுழற்சியின் பொதுவிதிகள் பல உள்ளன. குறிப்பாக மண்ணின் தன்மை, தட்பவெட்பநிலை, பருவம், விளையும் பொருள், விளையும் பொருளை விற்பதற்கான சாத்தியகூறுகள் ஆகியவற்றிற்கு பொருத்தமான பயிர்களைதான் பயிர்சுழற்சியில் சேர்க்க வேண்டும். மேலும் மண்வளத்ததை பெருக்குதல் அல்லது பாதுகாத்தல், மண் அரிப்பை தடுத்தல், களைகளை கட்டுப்படுத்துதல், பூச்சிகளையும், நோய்களையும் தடுத்தல் ஆகியவற்றின் சாத்தியகூறுகளையும் ஆராய்ந்து அவற்றிற்கு ஏற்ப பயிர் சுழற்சி முறையை நிர்ணயிக்க வேண்டும். பயிரினை தேர்வு செய்யும்பொழுது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பல உள்ளன. குறிப்பாக பயிர் சுழற்சி முறையை பொறுத்தவரையில் பயிர்களை கீழ்காணும் வகைகளாக பிரிக்கலம். அ. தீவனபயிர்கள், ஆ.அவரை இனப்பயிர்கள, இ. நெருக்கமாக விதைத்து சாகுபடி செய்யப்படும் சிறுதானிய பயிர்கள். இதில் அவரை இனத் தாவரத்தை தொடர்ந்து, வரிசையில் நட்டு சாகுபடி செய்யப்படும் பயிரையும், அதை அடுத்து நெருக்கி விதைத்து சாகுபடி செய்யப்படும் தானிய பயிரையும் சாகுபடி செய்யவேண்டும். மேலும் வேர் வளர்ச்சியினை அடிப்படையாக கொண்டு பயிரினை தேர்வு செய்ய வேண்டும் உதாரணமாக குறுகிய வேர் பகுதியினை உடைய நெல் சாகுபடி செய்யப்பட்ட பின் நீண்ட வேர்பகுதியினை கொண்ட காய்கறிச் செடிகள், பருத்தி, துவரை போன்ற பயிர்களை தேர்வு செய்யலாம். இவ்வாறு தேர்வு செய்வதால் மண்ணின் எல்லா பகுதியிலும் உள்ள ஊட்ட சத்துக்களையும் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல. ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எடுக்கும் பயிர்களுக்குபின் ஊட்டசத்துக்களை மண்ணிற்கு கொடுக்கும் பயறுவகை பயிர்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவேண்டும். பயறுவகை செடிகளால் மட்டும் தான் ஆகாய மண்டலத்தில் உள்ள தழைசத்தை தனது வேர் முடிச்சுகளிலுள்ள ரைசோபியம் என்ற பாக்டீரியாவின் உதவியால் கிரகித்து மண்ணிற்கு கொடுக்க முடியும். ஆகவே, பயிர் சுழற்சியில் இவ்வகை செடிகளை பயிரிடுவது சிறந்ததாகும். இவை முந்திய பயிர்கள் மண்ணிலிருந்து எடுத்த தழை சத்தில் பெரும் பகுதியை தனது வேர் முடிச்சுகள் மூலம் திருப்பி கொடுக்க வல்லன. அதன் மகத்துவம் மதிப்பிடற்கரியது. மேலும் ஒவ்வொரு வகை பயிர்களுக்கும் குறிப்பிட்ட சிலவகை ஊட்ட சத்துக்களை அதிகப்படியாக பயன்படுத்தும் குணம் உண்டு. ஆகவே ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வகை பயிர்களை சாகுபடிக்கு தேர்வு செய்வதால் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் சமச்சீரான அளவில் பயன்படுத்தப்படும் நிலை உருவாக்கப்படுகிறது. இதுமட்டுமல்ல பலவகையான சத்து உறிஞ்சும் தன்மைகளை பெற்றிருக்க வேண்டும்.

உதாரணமாக தானிய பயிர்கள் மேற்பரப்பிலுள்ள சத்துகளை எடுத்துகொள்ளும். அத்துடன் பயிர்களின் தாவர உணவு தேவை வேறுபட்டிருக்க வேண்டும். உதாரணமாக பயறு வகை, தானிய வகை, கிழங்கு வகை பயிர்கள் வேறுபட்ட அளவில் ஒவ்வொரு தாவர உணவையும் எடுத்துகொள்கிறது. அதைவிட நிலத்திற்கு பயிர் சத்துகளை கொடுக்கும் தன்மை பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக பசுந்தாள் உரச்செடிகள்.

பயிர் சுழற்சி தரும் பல நன்மைகள்

ஒரு நிலத்தில் திரும்பதிரும்ப வெவ்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படும்போது பயிர் ஊட்டங்கள் மண்ணில் குறையாமல் இருக்க வழி செய்கிறது.

பயிர்சுழற்சி முறை களைகளை கட்டுப்படுத்த உதவும் பயிரை மாற்றும்பொழுது விதைப்பு காலமும், இடை உழவு காலமும் மாறுபடும். இதனால் ஒரு குறிப்பிட்ட பயிருக்கு என்ன சூழ்நிலை வேண்டுமோ அதே சூழ்நிலையில் வளரும் களைகள் வேறு பயிர்கள் சாகுபடி செய்யும்போது விருத்தியாகாது.

பயிர்சுழற்சிமுறையை கையாளும்போது மேல்மட்ட மண்ணிலுள்ள பயிர் சத்துகளும் கீழ்மட்ட மண்ணிலுள்ள சத்துகளும் பயிர்களால் பயன்படுத்தப்படும். சல்லி வேர்களை உடைய பயிர்கள் மேல்மட்ட மண்ணிலுள்ள உணவு சத்துகளையம், ஆணிவேர் பயிர்கள் கீழம்ட மண்ணிலுள்ள சத்துக்களையும் பயன்படுத்தும். பருத்திக்கு அதிகம் தேவைப்படுவது தழைசத்து, நிலக்கடலைக்கு அதிகம் தேவைப்படுவது சாம்பல் சத்தாகும். ஒரு நிலத்தில் கடலை மட்டும் பயிர் செய்துகொண்டே இருந்தால் தழைசத்து நிலதில் தங்கிவிடும். அது தண்ணீரில் கரைந்து வேறு பகுதிக்கு சென்று வீணாகிவிடும் அதேபோல், பருத்தி மட்டும் பயிர் செய்து வந்தால் சாம்பல் சத்து நிலத்தில் தங்கிவிடும். ஆகவே இரு பயிர்களும் ஒரு நிலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பயிர் செய்யப்படும்போது அந்நிலத்தில் உள்ள ஒரு சத்துகளும் பயிர்களால் பயன்படுத்தப்படும்.

பசுந்தாள் உரப்பயிர் பயிர் சுழற்சியால் இருக்கும்போது தழை சத்தும், கரிமபொருட்களும் கணிசமான அளவில் கிடைத்து நிலவளம் பெருகும்.

பயிர் சுழற்சியால் தானியபயிர், வியாபாரபயிர், பசுந்தாள் உரபயிர் முதலியவைகளை சேர்த்து கொண்டால் உணவுக்கு வேண்டிய தானியம், செலவுக்கு வேண்டிய பணம், கால்நடைகளுக்கு வேண்டிய தீவனம், நிலத்திற்கு வேண்டிய உரம் ஆகிய அனைத்தும் பண்ணையில் சாகுபடி செய்யப்படும் பயிர்களிலிருந்தே கிடைப்பதற்கு வழிவகுக்கிறது.

மண்ணின் எல்லா பகுதியிலும் உள்ள ஊட்ட சத்துக்கள் பயன்படுத்தும் வாயப்பு ஏற்படுகிறது.

பயிர் சுழற்சி கீழ்காணும் வழிகளில் நிலத்தை மேம்படுத்துகிறது.

நிலத்தின் பொளதீக தன்மையை சாதாரணமான முறையில் நிலைபெற செய்கிறது.

பயறுவகைகளை பயிர் செய்வதால் நிலத்திற்கு தழைசத்தும், அங்ககப் பொருட்களும் அதிக அளவில் சேர்ப்பிக்கப்படுகிறது.

எருக்களையும், உரங்களையும் சிக்கனமான பலனுள்ள முறையில் பயன்படுத்த பயிர் சுழற்சி பயன்படுகிறது.

பயிர் சுழற்சி நிலததில் தோன்றும் வி’ப்பொருள்களின் தீமைகளை சரிகட்டுகிறது.

மண்வளம் வரையறுப்பு

மண்ணின் விளைச்சல் கொடுக்ககூடிய தன் வளசக்தியை மண்வளம் என்று கூறலாம். வளமான நிலத்தை தன் திறமையான நிர்வாகத்தினால் நல்ல விளைச்சல் கொடுக்கும்படி செய்யலாம். தவறான நிர்வாகத்தினால் வளம்மிகுந்த நிலமும்கூட குறைந்த விளைச்சலைக் கொடுக்கும்படி செய்யலாம். ஆகையால் தவறான நிர்வாகத்தினால் வளம் மிகுந்த நிலம்கூட குiற்நத விளைச்சலை கொடுக்கும். ஆகவே விளைச்சலை உண்டாக்குவதில் நிலத்தின் விளைச்சல் திறனும், நலத்தின் தன் வளத்ததிறனும் வேறுபட்டிருக்கிறது. மண்ணின் வளம், நல்ல வளைச்சலை கொடுக்கக்கூடிய முக்கியமான அம்சங்களின் கூட்டுச் சேர்க்கையை பொறுத்திருக்கிறது. அவற்றில் சில அம்சங்கள்,

மண்ணின் அமைப்பு
நிலத்தின் காற்றோட்டம்
கார அமில தன்மை

வளம் மிகுந்த நிலம்கூட மேற்கூறிய அம்சங்களுள் ஏற்ற அல்லது உதற்த அளவில் ஒத்து போகவில்லையென்றால் குறைந்த விளைச்சலை கொடுக்கும். ஆகவே நில்தின் வளமும் நிலத்தின் விளைச்சல் திறனும் சிறிது மாறுபட்டிருக்கிறது.

மண்வளத்தை நிலைக்க செய்யும் அம்சங்கள்

இரசாயன உரங்களையும் மற்று உரங்களையும் சரியானபடி பயன்படுத்துதல் தேவையானபோது சுண்ணாம்பு இடுதல், சீராக உழுதல், வடிகால் பாசனவசதி, நல்ல வித்து, களையெடுப்பு, பயிர் பாதுகாப்பு மண்வளப் பாதுகாப்பு, உரியமுறைதயில் பயிர்களை மாற்றிமாற்றி விளைவித்தல் முதலியன விவசாயம் செழித்தோங்க வகைசெய்யும்.

மண் வளம் அதிகரித்தால் மண்புழுக்களின் பெருக்கம், நுண்ணுயிர்களின் வகை மற்றும் பெருக்கம், மண்ணின் அமைப்பு, நீர் வடியும் தன்மை, நீர் தேக்கி வைக்கும் தன்மை, மக்கின் அளவு போன்றவை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும். இதனால் பயிர்கள் பூச்சி மற்றும் பூஞ்சாண் எதிர்ப்பு திறனுடையதாக ந்னகு வளர்ந்த நல்ல விளைச்சலை கொடுக்கும். இங்கு பயிர் பாதுகாப்புக்கான செலவு குறைக்கப்படுகிறது. எனவே பயிர் சுழற்சி பின்பற்றுவதினால் சாதகமான விளைவுகள் உள்ளன என அறிவோம். செயல்டுவோம்.

டாக்டர் பா.இளங்கோவன்

மேலும் விபரம் பெற 98420 07125 உள்ளது.

Spread the love