ஈரோடு, ஜூலை 8
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வட்டாரத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் ம.கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட விதை சான்று அலுவலர் அ.தமிழரசு, விதைப்பண்ணை அமைப்பது தரமான விதைகளை உற்பத்தி செய்யும் முறைகள் மற்றும் அங்கக சான்று பதிவு முறைகள் பற்றியும் கூறினார். இப்பயிற்சியில் குமரகுரு வேளாண்மைக் கல்லூரி உதவி பேராசிரியர் தனசேகரன் மண்புழு உரம் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்தார். அம்மாபேட்டை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரபாகரன் விவசாயிகளுக்கு அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர் தியாகராஜன் செய்திருந்தார். இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மதிய உணவு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
Spread the love