August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண்புழு உரம் தயாரித்தல் தொழில் நுட்ப பயிற்சி

கோவை, ஏப்.5

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தோட்டக்கலை பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள் தங்கள் ஊரக தோட்டக்கலை பணி அனுபவம் பாடத்தினை தொண்டாமுத்தூரில் உள்ள நரசிபுரம் கிராமத்தில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் 10ம் தேதி தங்கள் பாடத்தின் ஒரு பகுதியாக தீனம்பாளையம் கிராமத்தில் மண்புழு உரம் தயாரித்தல் தொழில் நுட்பத்தினை அந்த ஊர் விவசாயிகளுக்கு வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் இயக்குனரான கிஷோர் தோட்டத்தில் விளக்கினர்.
 ————–

Spread the love