January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண்வள அட்டை குறித்த விவசாயிகள் பயிற்சி

சிவகங்கை, ஜன.10

சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண்வள அட்டை பயிற்சி கல்லல் ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் மற்றும் அரண்மனை சிறுவயல் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமையில் அரண்மனை சிறுவயல் கிராமத்திலுள்ள கூட்ட அரங்கில் 07.01.2022 மற்றும் 08.01.2022 ஆகிய இரு தினங்களாக நடைபெற்றது.

இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் சு.அழகுராஜா, முன்னிலை வகித்து மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்தும், மண்ணின் உள்ள களர், உவர், அமிலத் தன்மையை கண்டறிந்து அதற்கேற்ற பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்தல் மண் பரிசோதனை செய்வதால் மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நிலவரம் விவசாயி களுக்கு தெரிய வருகிறது. நிலவரத்திற்கு ஏற்ப பயிர்களை பயிர் செய்வது குறித்து ஏடுத்துரைத்தார்.

களர்நிலம் சீர்திருத்தம் முறைகளான இயற்கை உரங்களான தொழுஉரம் தழை உரங்கள் இடுவது மற்றும் வடிகால் வசதி பெருக்குதல், சுண்ணாம்பு சத்து இல்லாத நிலத்திற்கு ஹெக்டர் 500 கிலோ ஜிப்சம் இடுதல் மற்றும் அமில நிலச்சீர்திருத்தம், உவர் நிலச்சீர்திருத்தம் போன்றவைகள் பற்றியும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம் செட்டிநாடு பேராசிரியர் மற்றும் தலைவர் குருசாமி சிறப்புரையாற்றினார்.

இப்பயிற்சியில் மண் ஆய்வு எடுப்பதன் முறைகள், பயன்கள், எவ்வாறு உரம் இடுவது என்னென்ன உரங்கள் இடுவது போன்ற விவரங்களை சிவகங்கை மண் பரிசோதனை நிலைய உதவி வேளாண்மை அலுவலர் ஆரோக்கியராஜ் மண் பரிசோதனை செய்யும் முறைகளை பற்றி எடுத்துரைத்தார்.

மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் தமிழக முதல்வரின் தொலைநோக்கு திட்ட மான நிகர சாகுபடி பரப்பினை 60 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடாக உயர்த்துதல், இருபோக சாகுபடி பரப்பினை இரு மடங்காக உயர்த்துதல், உணவு தானியங்கள் உற்பத்தியில் இந்தியளவில் முதல் இடம் பெறுதல் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பஞ்சாயத்துகளில் செயல்படுத்தி கிராம ஊராட்சியினை மேம்படுத்துவது குறித்து கூறினார். மண் மாதிரி எடுக்கும் முறை பற்றி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா செய்து காண்பித்தார். விவசாயிகளுக்கு மண்வள அட்டை, தொழில்நுட்ப கையேடு மற்றும் இலை வண்ண அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் வயலாய்வு செய்யப்பட்டு இலைவண்ண அட்டை பற்றி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

Spread the love