திண்டுக்கல், மார்ச் 9
மதுரை வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள் மோதிஸ்குமார், முத்துகுமார், நாகராஜன், பனின்ந்த்ரா, பிரவீன்குமார், ரமேஷ் ஆகியோர் ஊரக வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் தங்கி உள்ளனர். அவர்கள் நத்தம், உதவி வேளாண் இயக்குநர், இடையபட்டி கிராமத்தில் மண்வள அட்டை – மாதிரி கிராமம் தொடர்பாக நடத்திய விவசாயிகள் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு உதவி வேளாண் இயக்குநர் தேன்மொழி, வேளாண் அலுவலர் நல்லமுத்துராஜா, திருனாவுக்கரசு ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இம்முகாமில் மண்வள மேலாண்மை குறித்த பயிற்சியை பெற்றனர். மேலும், அம்மாணவர்கள் மண் மாதிரி எடுக்கும் அணுகுமுறையை விவசாயிகளுக்கு செய்முறை மூலம் நிகழ்த்தி காட்டினர். அதாவது, ஏக்கருக்கு குறைந்தது 10 முதல் 15 மாதிரிகள் மண்வெட்டியைக் கொன்டு 15 செ.மீ ஆழத்தில் V வடிவ வெட்டில் எடுக்க வேண்டும். அதை, காலாண்டு முறைப்படி அரை கிலோவாக குறைக்க வேண்டும். அதுவே, மண் பரிசோதனைக்கு ஏற்றது.
Spread the love