June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண்வள அட்டை திட்டம்
விழிப்புணர்வு நிகழ்வில் வேளாண் கல்லூரி மாணவர்கள்

விருதுநகர், ஏப்.9

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விவசாயிகளுக்கு கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ், தமிழக அரசின் மண்வள அட்டை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தின், காளையர்க்குறிச்சி கிராமத்தில், கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள், ம.அபினேஷ், கு.நாகராஜன், சு.இசக்கிராஜ், கோ.ஸ்ரீராம், அ.அதுல்கிருஷ்ணன், க.ஷியாம் (எ) சோனைமுத்து, கோ.சீ.ஸ்ரீநாத் ஆகியோர் விவசாயிகளுக்கு மண்வள அட்டை திட்டம் குறித்தும் மற்றும் மண் வளத்தை மேம்படுத்தும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் குறித்தும் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். இவற்றில் மண்வள அட்டையின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார் மேலும் எவ்வாறு மண் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் தெளிவுரை கூறினர். மேலும் இயற்கை சார்ந்த விவசாயம் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

இத்தகவலை சிவகாசி, வேளாண்மை உதவி இயக்குநர், ஜா.இரவிசங்கர் தெரிவித்தார்.

Spread the love