கடலூர், மே 5
கடலூரில் குழாய் பொறுத்திய மண் பானை விற்பனை தீவிரமடைந்துள்ளது.
கத்திரி வெயில் என்ற அக்னி நடத்திரம் செவ்வாய்க்கிழமை துவங்கி, வரும் 29ம் தேதி வரை தொடர்கிறது. கோடை காலங்களில் மற்ற நாட்களைவிட இந்த நாட்களில் வெயில் உக்ரமாக இருக்கும். உடல் உஷ்ணத்தைத் தவிர்க்க மக்கள் இளநீர், பழச்சாறு, தர்பூசணி, குளிர்பானங்கள் அருந்துவர். அதே போன்று, வெயில் காலங்களின் மண் பானை தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்.
உடலுக்கு எவ்வித கெடுதலும் இல்லை என்பதால், மக்கள் தங்களின் வீடுகளில் மண் பானைகளை வாங்கி வைத்து, பானை தண்ணீரை விரும்பி அருந்துவர். இந்நிலையில், அக்னி நட்சத்திரம் துவங்கியதையடுத்து, கடலூரில் குழாய் பொறுத்தப்பட்ட மண் பானை விற்பனை தீவிரமடைந்துள்ளது. ஒரு பானை அளவிற்கேற்ப ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது.