August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண் வளத்தை அதிகரிக்க கோடை காலத்தில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி

சிவகங்கை, ஜூலை 11

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விரிவாக்க சீரமைப்பு திட்டம் (அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கீழ்கண்ட மண் வளத்தை அதிகரிக்க கோடை காலத்தில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி. அ.அம்சவேணி விரிவான முறையில் எடுத்துக் கூறினார்.

விவசாயப் பெருமக்கள் கோடை காலத்தில் பெறக்கூடிய மழையைப் பயன்படுத்திஇ பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடுவதன் மூலம் அடுத்து வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் சாகுபடி செய்யக்கூடிய பயிருக்குத் தேவையான இயற்கை உரங்களை எளிதில் அளிப்பதுடன் மண்வளத்தையும் பாதுகாக்க இயலும். தற்பொழுது இரபி பருவ பயிர்களை அறுவடை செய்தபின் தரிசாக உள்ள நிலங்களில் பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பைஇ தக்கைப்பூண்டு அல்லது பயறுவகைப் பயிர்களை குறிப்பாக காராமணிஇ பாசிப்பயறுஇ கொள்ளு ஆகியவற்றை ஏக்கருக்கு 20 கிலோ என்றளவில் விதைத்துஇ பூ பூக்கும் பருவம் வரை வளரவிட்டுஇ அந்த நிலத்திலேயே மண்ணில் ஈரம் இருக்கும் பொழுது மடக்கி உழுதுதல் வேண்டும். இவ்வாறு செய்வதால் மண்வளம் மேம்படுத்தப்படுகின்றது. மேலும்இ பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்துஇ பயிர்ச் சாகுபடியில் பல்வேறு நன்மைகளையும் விளைவிக்கின்றது.

பசுந்தாள் உரமிடுவதால் விளையும் நன்மைகள்
மண்ணில் உள்ள அங்ககப் பொருட்களின் அளவே மண்வளத்தை நிர்ணயிக்கின்றது. அந்த வகையில் பசுந்தாள் உரப்பயிர்களை மண்ணில் மடக்கி உழும்போதுஇ அவை மண்ணில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களின் தாக்குதலுக்கு உட்பட்டு ஹீயூமஸ் எனப்படும் மக்குப்பொருள் மற்றும் இதர அங்ககப் பொருட்களைத் தருகின்றது. இது மண்ணில் உயிரோட்டத்தை ஏற்படுத்திஇ மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகரித்துஇ பயிர்களை வறட்சியிலிருந்து பாதுகாக்கின்றது.

பயிருக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவு

பசுந்தாள் உரப்பயிர்கள் ரைசோபியம் என்ற பாக்டீரியாவின் உதவியுடன்இ காற்றிலுள்ள தழைச்சத்தை வேர் மற்றும் தண்டு முடிச்சுகளில் சேமிக்கின்றன. அவற்றை மண்ணுக்குள் மடக்கி உழுவதால் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 30-75 கிலோ தழைச்சத்து கிடைக்கின்றது.

பசுந்தாள் உரப்பயிர்கள் மண்ணில் நுண்ணுயிர்களின் உதவியுடன் சிதைக்கப்படும் பொழுதுஇ அவற்றிலிருந்து பேரூட்டங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் வெளியாகி அடுத்து சாகுபடி செய்யக்கூடிய பயிர்கள் நன்கு செழித்து வளர உதவுகின்றது.

மேலும், பசுந்தாள் உரப்பயிர்களை மண்ணுக்குள் மடக்கி உழுவதால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரித்துஇ அவற்றிலிருந்து பலவிதமான அங்கக அமிலங்கள்இ வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் நொதிப்பொருட்கள் வெளிப்படுகின்றன. இந்த அங்கக அமிலங்கள் மண்ணில் கரையாத நிலையிலிருக்கும் ஊட்டச்சத்துக்களை குறிப்பாக மணிச்சத்தை கரைத்து பயிர்கள் எடுத்துக்கொள்ளும் வடிவத்தில் மாற்றி கொடுக்கின்றது. இதனால்இ பயிருக்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரிக்கின்றது.

மண்ணின் கட்டமைப்பு
பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்வதால்இ மண்ணின் மேற்பரப்பை காற்று மற்றும் நீர் அரிமானத்திலிருந்து பாதுகாப்பதுடன் மண்ணிலிருந்து சத்துக்கள் அடித்துச் செல்வது தடுக்கப்படுகின்றது. மேலும் மண் இறுக்கமாவது தடைப்பட்டுஇ மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றது. பசுந்தாள் உரங்கள் மணற்பாங்கான நிலங்களில் மண்ணின் நீர்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கின்றது. களிமண்பாங்கான நிலங்களில் காற்றோட்டத்தை ஏற்படுத்திஇ நல்ல வடிகால் வசதியையும் ஏற்படுத்தி தருகின்றது.

களர் மற்றும் உவர் நிலச் சீர்திருத்தம்

பசுந்தாள் உரப் பயிர்கள் மக்கும்பொழுது வெளிப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு (கரியமில வாயு) களர் மண்ணிலுள்ள கால்சியம் கார்பனேட்டிலிருந்து கால்சியத்தை கரைத்து வெளியேற்றுவதன் மூலம், மண்ணின் அமிலகார நிலையை குறைத்து களர் மண்ணை பயிர் வளர்ச்சிக்கு உகந்ததாக மாற்றுகின்றது.

கோடை காலங்களில் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம், மண்போர்வை போல செயல்பட்டு மண்ணிலுள்ள நீர் ஆவியாதலைத் தடுக்கின்றது. இதன் விளைவாக மண்ணின் ஆழமான பகுதிகளில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் உப்புகள் தரைமட்டத்திற்கு கொண்டு வராமல் தடுக்கப்படுகின்றது. இதன் வாயிலாக உவர் மண் உருவாவது தடைப்பட்டு பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல்
பயிர்ச் சுழற்சி முறையில் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்வதால், வழக்கமாக பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களின் சுழற்சியில் இடையூறு விளைவிக்கிறது.
உற்பத்தி செலவு மற்றும் விளைச்சல், பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து மண்ணில் மடக்கி உழுவதால் அடுத்து சாகுபடி செய்யக்கூடிய பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதன் வாயிலாக உரச் செலவு சேமிக்கப்படுகின்றது. மேலும்இ பசுந்தாள் உரப்பயிர்களை மண்ணில் மக்கச் செய்வதால் களைச் செடிகளின் விதை முளைப்புத் திறன் பாதிக்கிறது.

எனவே, விவசாயப் பெருமக்கள் பல்வேறு நன்மைகளை தரக்கூடிய பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டு, மண்ணில் மடக்கி உழவு செய்து பின் பயிர்ச் சாகுபடி செய்வதன் மூலம், மண் வளத்தை அதிகரித்து, பயிர்களில் அதிக விளைச்சலைப் பெற முடியும்.

Spread the love