June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மண் வளம் காக்க செய்ய வேண்டி வழிமுறைகள்

இயற்கை நமக்களித்த இணையற்ற வளங்களில் முக்கியமான மண்வளத்தை பொறுத்தே மனித சமுதாயத்தின் வாழ்வும், மறைவும் அமைந்துள்ளது. பூமியில் 15 முதல் 18 அங்குல ஆழம் வரையிலான மேல்புற மண் தான் செழிப்புக்கும், தாவரங்களின் உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக உள்ளது. கடந்த 40 முதல் 50 ஆண்டுகளில் 52 சதவிகித சத்தான மேற்புற மண்ணை நாம் இழந்துவிட்ட நிலையில் இனிமேலாவது மண் வளத்தை காத்திட முயற்சி எடுப்போம்.

இப்போது உள்ள மக்கள் தொகையின் உதவியுடன் ஒரு அங்குல ஆழமுள்ள வளமான மண்ணை உருவாக்கிட 13 ஆயிரம் ஆண்டுகள் தேவைபடுகிறது என ஆய்வாளர்களால் தெரிவிக்கப்படுகிறது. இதிலிருந்து நாம் அறிவது எவ்வளவு கஷ்டமான செயல் என்று எப்போதாவது மண்ணை பற்றி சிந்தித்து இருக்கிறேமா? இல்லை நமக்கு அதிக மகசூல் பெற வேண்டிய கண்ட கண்ட உரத்தை, பூச்சி மருந்தை தெளித்து இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறாக நீடித்தால் 2045ம் ஆண்டுகுள் உணவு உற்பத்தி 40 சதவிகிதமாக குறைந்த விடும் என, ஐ.நா.சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாம் செய்ய வேண்டிது என்ன?
கோடை உழவு, ஆழச்சால் அகலபாத்தி அமைத்து நிலத்தை பாதுகாக்க வேண்டும். (ஏழு உழவு போட்டால் எரு போட வேண்டியதில்லை என்பது பழ மொழி). பயிற்சுழற்சி இந்த ஆண்டு ஒரு வித்திலை தாவரங்கள் சாகுபடி என்றால் அடுத்த பருவத்தில் இரு வித்திலை சாகுபடி பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும். மண்பரிசோதனை அடிப்படையில் பரிந்துரைக்கபட்ட உரங்களை இடுதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலத்தில் குள கரம்பை, வண்டல் மண் இடுதல், பசுந்தாள், தழை உரங்களை இடுதல், மண்ணின் கரிம சத்துகளை கூட்டிட பலதானிய பயிர் விதைப்பு செய்து 40 நாட்களில் மடக்கி உழுதல், வரப்பு ஒரங்களில் மரங்களை நட்டு அதன் இலை தழைகளை உரமாக்குதல், ஆட்டு கிடை, மாட்டு கிடை போன்றவைகளை வாய்ப்பான நேரங்களில் போடுதல் போன்ற பணிகளை செய்து மண்ணை வளமாக்கிட முயற்சி செய்வோம். வளமான மண்ணை வருங்கால சந்ததியினருக்கு விட்டு செல்வோம்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன் வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை.

Spread the love