October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மதுரையில் உரக்கடைகள் தீடீர் ஆய்வு

மதுரை, அக்.9

மதுரை மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான இரசாயன உரங்கள் உர உரிமம் பெற்ற அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் (175 ழேள) மற்றும் தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்களில் (195 ழேள) யூரியா-2112 மெ.டன், டிஏபி- 682 மெ.டன் , பொட்டாஷ்-675 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ்-2584 மெ.டன் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு Pழுளு இயந்திரம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

08.10.2021 அன்று வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண் இயக்குநர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களில் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களின் தலைமையிலான குழுவினால் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ஐ மீறி செயல்பட்டது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 சில்லரை உர விற்பனை நிலையங்களுக்கு 21 நாட்கள் விற்பனைத்தடையும், 4 சில்லரை உர விற்பனை நிலையங்களுக்கு 7 நாட்கள் விற்பனைத்தடையும் மற்றும் 6 சில்லரை உர விற்பனை நிலையங்களுக்கு கடுமையாக எச்சரித்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதி பெறாமல் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட உரங்கள் 2250 கிலோ விற்பனை தடை செய்யப்பட்டது. யூரியா விற்பனை செய்யும் பொழுது இணை பொருட்களை (பயிர் ஊக்கிகள்) வாங்க கட்டாயப்படுத்துவது உரக்கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எதிரானது. மேலும் விற்பனை முனை கருவியில் உள்ள இருப்பும், உண்மையான உர இருப்பும் சரிபார்ர்க்கப்பட்டது. அதிகபட்ச சில்லரை விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக மதுரை வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன் தெரிவித்தார்.

Spread the love