மதுரை, மார்ச் 15
மதுரை மாவட்டம் வேளாண்மைஅ றிவியல் நிலையத்திற்கு, திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனர். ஊரக வேளாண் பணி அனுபவத்தின் கீழ் ம.ரவ்மிதா, இரா.ரோஷில் பென்சுவீட்டி, ந.சங்கீதா, க.ர.சரண்யா, சா.சரண்யா, சீனு.சரண்யா, ர.சத்யா, செ.ஷர்மிளா, ப.வ.சிந்து, க.சினேகா, தி.சினேகா ஆகியோர் இப்பயணம் மேற்கொண்டனர். அவர்கள் மதுரையில் உள்ள கடச்சநேந்தல் பகுதியில் அக்குவா கார்டன்மீன் பண்ணைக்கு சென்றனர். பண்ணை நிறுவனர் சாந்தி கிருபாகரனை வேளாண் மாணவிகள் சந்தித்து அக்வா கார்டனில் நடைபெறும் செயல்பாடுகளைப் பற்றி கேட்டறிந்தனர். அங்கு 30க்கும் மேற்பட்ட அலங்கார மீன் வகைகளான அரோவானா, கோல்டன் ஃபிஷ், ஜாப்பனீஸ் கோய், ஃபுள் மூன் ஃபைட்டர் ஃபிஷ், ஏஞ்சல் ஃபிஷ், விடோ டெட்ரா, டைகர் ஃபிஷ், நியான் டெட்ரா, அல்லிகட்டர் ஃபிஷ், டேங்க் கிளீனர், டைகர் ஷார்க் போன்ற அலங்கார மீன்கள் வளர்க்கப்பட்டு இருந்ததை மாணவிகள் கண்டனர். அங்கு பொதுமக்கள் வண்ணமயமான அலங்கார மீன்களை வளர்ப்பதற்காக ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
Spread the love