August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மதுரை மாவட்டத்தில் சுதந்திர தின அமுத பெருவிழா பற்றிய விழிப்புணர்வு

மதுரை, ஆக. 3

மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தால் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா பற்றிய விழிப்புணர்வு சேடப்பட்டி வட்டாரத்தில் சென்னம்பட்டி கிராமத்தில் நடத்தப்பட்டது. விழாவில் விடுதலைக்காக பாடுபட்டவர்களையும் விடுதலையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வும் கொடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கான வினாடி- வினா போட்டி வேளாண்மையில் வேளாண் புரட்சி முதல் இரண்டாம் வேளாண் புரட்சி வரை என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. போட்டியில் 45 விவசாயிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வேளாண்மை இணை இயக்குனர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையில் வேளாண்மை துணை இயக்குனர் முன்னிலையில் வழங்கப்பட்டது. மேலும் வேளாண்மையில் ஆடி பட்டத்திற்கான சாகுபடி வழிமுறைகளையும் அதற்கு தேவையான சோளம், கம்பு, உளுந்து ஆகியவற்றின் புதிய ரகங்களின் விதைகள் முன்னிலை செயல் விளக்கங்கள் மூலமாக வழங்கப்பட்டது. சாகுபடி முறைகள் பற்றி முனைவர் வள்ளல் கண்ணன், முனைவர் உஷாராணி, முனைவர் கிருஷ்ணகுமார் மற்றும் முனைவர் ஜெகதீஷன் ஆகியோர் செயல் விளக்கங்களுடன் விளக்கி கூறினார். விழாவில் 106 விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகள் வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையமும் இணைந்து செய்ந்திருந்தனர். விழாவில் சேடப்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர், வேளாண் அலுவலர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வேளாண் இடுபொருட்களின் கண்காட்சி அமைக்கப்பட்டது.

Spread the love