January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மதுரை மாவட்ட விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்

மதுரை, டிச.23

மதுரை மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (வே.தொ.மே.மு) திட்டத்தின் கீழ் மாவட்ட விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் 23.12.2021ல் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து வட்டாரத்தை சேர்ந்த வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தை திட்ட இயக்குநர் / வேளாண்மை இணை இயக்குநர் த.விவேகானந்தன் தலைமை தங்கினார். துணை திட்ட இயக்குநர் / வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) கு.சிவ.அமுதன், வரவேற்புரை வழங்கினர். இக்கூட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (வே.தொ.மே.மு) திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் நிதி பங்கீடு குறித்து குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. வரும் காலங்களில் வே.தொ.மே.மு திட்ட செயல்பாடுகளை புதிய உறுப்பினர்கள் முழு பங்களிப்புடன் செயல்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்ட உறுப்பினர்கள் தங்கள் வட்டார விவசாயிகளின் கோரிக்கைகளை இக்கூட்டத்தில் தெரிவித்தனர். இந்த ஆண்டு பயிற்சி மற்றும் கண்டுனர் பயணம் உட்பட அனைத்து இனங்களிலும் பெறப்பட்ட நிதியினை உரிய திட்டவழிகாட்டுதலின்படி சாதனை அடைந்திட கேட்டுக்கொள்ளப்பட்டது. வேளாண்மை அலுவலர் முத்துலெட்சுமி நன்றி கூறினார். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ர.சோமசுந்தரம் (கணக்காளர்) மற்றும் இரா.உதேஷ் குமார் (கணினி தொகுப்பாளர்) ஏற்பாடு செய்தனர்.

Spread the love